சேலம் மாவட்டத்தில் நைனாம்பட்டி பகுதியில் கௌதமன் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சேட்டு, கார்த்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை சரபங்கா நதிக்கு குளிக்க சென்றுள்ளார். இந்த நதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வழக்கமாக குளிக்கும் இடம் என்று கருதி ஐயப்பனும் கௌதமனும் முதலில் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கௌதமன் மற்றும் ஐயப்பன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர்.
அவர்களை சேட்டுவும் கார்த்திக்கும் காப்பாற்ற முயற்சித்து உள்ளனர். ஆனால் முடியாத காரணத்தினால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றல் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் உள்ளூர் மீனவர்களைக் கொண்டும் நீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்களை தேடும் பணி தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.