வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் 4 பெண் குழந்தைகளை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார் .
பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார் . அதுமட்டுமின்றி கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கும் , ஏழ்மையில் இருந்த பலருக்கும் உதவிகள் செய்துள்ளார். இவரின் சேவையை பாராட்டி தெலுங்கானா மாநில மக்கள் இவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சோனு சூட் சமூக வலைத்தளங்களில் யார் என்ன உதவி கேட்டாலும் விரைந்து சென்று உதவி செய்து வருகிறார் .
यह परिवार अब हमारा है भाई । https://t.co/PIumFwdCDJ
— sonu sood (@SonuSood) February 19, 2021
இந்நிலையில் நடிகர் சோனு சூட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த எலக்ட்ரீசியன் ஒருவரின் 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் . சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஆலம்சிங் என்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்துள்ளார் . இதனால் அவரது நான்கு பெண் குழந்தைகள் பரிதவித்து வந்தனர் . இதையறிந்த சோனு சூட் அந்த நான்கு பெண் குழந்தைகளின் படிப்பு செலவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் .