வெள்ளத்தில் மூழ்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் வில்சன் என்பவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்திருக்கிறார். அங்கு சுமார் ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வள்ளியூர் பகுதியில் பெய்த கனமழையால் மழை நீர் பல்வேறு இடங்களில் சூழ்ந்தது. இதனால் கோழிப்பண்ணையின் காம்பவுண்ட் சுவர் திடீரென உடைந்தது.
இதனையடுத்து மழைநீர் பண்ணைக்குள் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீரில் அங்குள்ள சுமார் 5 ஆயிரம் கோழிகள் மூழ்கி உயிரிழந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.