மூதாட்டி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கிலி பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தென்னை மட்டைகளை எடுப்பதற்காக முனியம்மாள் நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் கரையோரம் தென்னை மட்டைகளை முனியம்மாள் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கிறார்.
அதன்பின் தனது தாயார் காணவில்லை என முனியம்மாள் மகன் ஜோசப் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியம்மாள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனை அடுத்து பாலாற்றின் கரையோரம் முனியம்மாள் சடலம் கிடந்ததாக பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.