Categories
உலக செய்திகள்

வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள நகரம்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. நீரில் மூழ்கிய பயிர்கள்….!!

கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளமானது கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6.47 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதிலும்  நல்பாரி, தர்ராங், லகிம்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மஜூலி மற்றும் பார்பேட்டா மாவட்டங்களில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

இதுவரை மொத்தம் ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 1300 கிராமங்களில் உள்ள 39,500 நிலப்பரப்பு பயிர்கள் வெள்ளத்தில் சேதமடைந்து நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக 10 மாவட்டங்களில் 85 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் 70% பகுதி வெள்ளத்தினால் சூழ்ந்துள்ளது. இதனால் 10 மான்கள் மற்றும் ஒரு குரங்கு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளப் பாதிப்பினால் தேசிய நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், பள்ளிகூடங்கள் , அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |