Categories
தேசிய செய்திகள்

வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு இனி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

நாட்டில் பொதுவாக வார விடுமுறை என்றால் அது ஞாயிற்றுக்கிழமையாக தான் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வாரம் தோறும் பொது விடுமுறை வழங்கப்படும். ஆனால் லட்சத்தீவில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால் லட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். லட்சத்தீவு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் பல ஆண்டு காலமாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

அதேபோன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை விடப்படும். இந்நிலையில் தற்போது பள்ளி நிர்வாகம் வெள்ளிக்கிழமை விடுமுறையை ரத்து செய்ததால் அப்பகுதி இஸ்லாமியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது லட்சத்தீவில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அறிவித்ததால் அப்பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக லட்சத்தீவின் எம்.பி முகமது பைசல் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதற்கு முன்பு மது விடுதிகளுக்கு அனுமதி, வளர்ச்சிக்கு நிலத்தை எடுத்துக் கொள்ளும் வரைவு சட்டம், குண்டர் சட்டம், மாட்டிறைச்சிக்கு தடை போன்றவை அமல்படுத்தப்பட்டு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |