வேலூர் மக்களவை தேர்தலில் சிறு வாக்கு வித்தியாசம் மட்டுமே நீடித்து வருவதால் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழிசை சௌந்தராஜான் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அவனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது 11,547 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலவரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இது குறித்து பேசுகையில்,
வேலூர் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் சிறு வாக்கு வித்தியாசங்கள் மட்டுமே இருந்து வருகிறது. ஆகையால் கட்டாயமாக அதிமுக வேலூர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதாக அவர் தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் மக்கள் தற்பொழுது தான் தமிழகத்தில் சூழ்நிலையையும் அரசியல் கட்சிகளையும் நன்கு உணர்ந்து வருகின்றனர் ஆகையால் ஆகையால் எங்களுக்கு நிறைய கால அவகாசம் இருக்கிறது அதை பயன்படுத்தி அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்