வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.
மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதற்காக வேலூரில் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ஆகஸ்ட் 5_ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்குள்ள மொத்த 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.51 சதவீதம் வாக்குகள் ஆகும். மேலும் பதிவான வாக்குபதிவு இயந்திரங்களும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணும் பணியில் 375-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர்.முதலில் பதிவாகிய தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 57,511 வாக்கு பெற்று 1423 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். முதலில் AC சண்முகம் முன்னிலை வகித்த நிலையில் கதிர் ஆனந்த் முன்னிலையில் பெற்றார்.இப்போது AC சண்முகம் முன்னிலை வகிக்கின்றார்.
வேட்பாளரும் வாக்குகளும் :
திமுக ( கதிர்ஆனந்த் ) 54,844
நாம் தமிழர் கட்சி ( தீபலட்சுமி ) 1058