தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரம் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு , இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகள் எண்ணப்பட தொடங்கியது முதல் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். ஏறக்குறைய வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் கதிர் ஆனந்த் பின்னுக்கு இருந்த நிலையில் தீடிர் திருப்பாமாக அதிமுக பின்னுக்கு சென்றது
தொடர்ந்தது நடைபெற்றுக்கு வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவின் ஏசி சண்முகம் 3,27,718 வாக்குகளும், கதிர் ஆனந்த் 3,40,473 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி தீபலட்சுமி 18,229 வாக்குகளும் பெற்றுள்ளனர். 15,000 வாக்குகள் பின்னுக்கு இருந்த நிலையிலும் தற்போது கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றார். இருவருக்கும் 17,198 வாக்குகள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.