வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நாளை மறுநாள் நடைபெறயுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இதில் 11.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இது வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் தான் என்று வருமானவரித்துறையினரும் , தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினர். இதையடுத்து வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் இரத்து செய்யப்படும் என்று சொல்லி வந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் இரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருக்கும் ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.