Categories
மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” அதிமுக சார்பில் வழக்கு ……!!

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக  நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

திமுக பொருளாளர் துரைமுருகன் க்கான பட முடிவு

இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி வருமான வரித்துறை_ யினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.இதில் கடந்த மாதம் 27-ந் தேதி இரவு வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருக்கும் துரை முருகன் இல்லம், அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தும் பொரியல் கல்லூரி, பள்ளிக்கூடத்தில் வருமான வரிதுறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூர் மக்களவை க்கான பட முடிவு

இதையடுத்து கடந்த 1_ஆம் தேதி மீண்டும் வருமானவரித்துறையினர்  துரைமுருகனின் நெருக்கமான நண்பர் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனைகளில் கட்டு கட்டாக ரூ.10 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கியது என்றும் , இது வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்த பணம் என்று ஆதாரம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறையினர் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினர்.

Seithi Solai

இந்நிலையில் நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தேர்தல் இரத்து செய்வதாக அறிவித்தது.இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில்  போட்டியிடும் ஏசி சண்முகம் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி மணிக்குமார் தலைமையில் விசாரணைக்கு வருகின்றது.

Categories

Tech |