Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் TO ஆந்திரா” கொழுந்து விட்டு எரிந்த ஆம்னி வேன்…… நடுவழியில் நின்ற பயணம்…..!!

வேலூர் அருகே ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேலூர் மாவட்டம் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் ரோட்டில் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் மாதவன். இவர் அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனங்களுக்கான ஸ்டாண்ட் நடத்திவருகிறார்.

இந்நிலையில் அவரது  மனைவிக்கு தீராத மூட்டு வலி இருப்பதால் அதனை குணப்படுத்துவதாக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பக்கத்து ஊர் டிரைவர் வெங்கடேசன் என்பவரை ஆம்னி வேன் எடுத்துக்கொண்டு வரச்சொல்லி இவரது மனைவி 2 மகள்கள், மருமகள்களுடன்  உடன் சேர்ந்து 8 பேர் ஒரே ஆம்னி வேனில் ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வண்டியில் இருந்து புகை வருவதை அறிந்த உடன் அனைவரையும் இறங்கச் சொல்லி ட்ரைவர் அடியில் குனிந்து பார்த்தபோது தீ பற்றி எரிய தொடங்கியது. பின் அனைவரும் வண்டியை விட்டு விலகிய சில மணி நேரங்களிலேயே தீ மளமளவென ஆம்னி வேன் முழுவதும் பரவியது. 

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பின் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கபட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஊர்மக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். மேலும் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |