Categories
மாநில செய்திகள் வேலூர்

இனி எல்லாம் வீட்டுக்கு….. வெளியே வர கூடாது….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…..!!

மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இனி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அத்தியாவசிய அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார், காவல்துறை உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, காய்கறிகள், பழங்கள், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் இது குறித்து பேசுகையில் , ஆம்பூர் நகரில் மட்டும் வங்கிகள் செயல்படாது. ரேஷன் பொருள்கள் அனைத்தும் அந்தந்த குடும்பத்தார்கள் வீட்டிற்கு வந்து சேரும். மேலும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி மருந்து உள்ளிட்ட பொருட்களும் அந்தந்த குடியிருப்பு பகுதிகளுக்கு தள்ளுவண்டி மூலமாக வினியோகம் செய்யப்படும்.

பொதுமக்கள் எந்த காரணத்திற்காகவும் வீட்டைவிட்டு வெளியே வரவே கூடாது என்றும், முதியவர்கள், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வீட்டினுள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆம்பூர் நகரை கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |