Categories
சினிமா தமிழ் சினிமா

வேல்முருகன் பாட்டு பாட … போட்டியாளர்கள் குத்தாட்டம் போடும் அன்சீன் புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இன்று பிக் பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது . அதில் உரியடி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற பாரம்பரிய பொங்கல் விளையாட்டுக்கள் நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக உள்ளனர்.

இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நாட்டுப்புற பாடல் ஒன்றை வேல்முருகன் பாட மற்ற போட்டியாளர்கள் சுற்றி நின்று குத்தாட்டம் போடுகின்றனர். இதனால் இன்றைய எபிசோட் சண்டைகள் எதுவும் இன்றி மிக கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |