Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரில் சென்ற வேலுமணி… அமித்ஷா கிட்ட பேச சொன்ன ஈபிஎஸ்… சைலெண்டா திரும்பிய ஸ்டாலின் …!!

அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நானும்,  அப்போதைய  அமைச்சர் அருமை சகோதரர் வேலுமணி அவர்களும் கேரளா சென்று, அம்மாநில முதலமைச்சரை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் இணைந்து ஒரு குழுவை அமைத்தோம். நம்முடைய அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருக்கின்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், கேரளத்தை சேர்ந்த செயலாளர் என குழு போட்டு,  இரண்டு மூன்று முறை குழுக்கள் சந்தித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது, அதனால் ஆனைமலை திட்டம் அப்படியே நிலுவையில் இருக்கிறது. 15 மாத கால ஆட்சியில் கிடப்பில் போட்டுவிட்டு, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளாவில் தென் மாநில முதலமைச்சருடைய கூட்டத்தை கூட்டினார். அதற்கு  கேரளாவிற்கு சென்றார் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின்.

அதில் கேரள முதலமைச்சரை சந்தித்து ஆனைமலை நல்லாறு திட்டத்தை பேசுங்க என்று சொன்னோம். ஆனால் அவர் பேசியதாக பத்திரிக்கையில் எந்த செய்தியும் முழுமையாக வரவில்லை. நீண்ட நெடிய நாட்களாக விவசாயிகள், இங்கே இருக்கின்ற பொதுமக்கள் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் மாண்புமிகு அம்மாவுடைய அரசில் தான் நீர் மேலாண்மை திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, இந்த ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்தோம். மீண்டும் அம்மாவுடைய அரசு அமையும், நிச்சயம் அந்த கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |