Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டு மனை தகராறு… 7-ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்…!!

ஒடுகத்தூரில் வீட்டுமனை தகராறில்   7-ம் வகுப்பு மாணவியை கடத்தி  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.  மாணவியின்  தந்தைக்கும் , அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவில் இவர்களுக்குள்  வாக்குவாதம் முற்றி  தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது . இதனால் கோபம் அடைந்த ஆண்டியின் மகன் குமார் பலவந்தமாக வீடு புகுந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார். 

இந்நிலையில் மாணவி காணவில்லை என்று பெற்றோர்கள் தேடி அலைந்த போது ஆண்டியின் உறவினர் வீட்டில் மாணவி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மாணவியின் தந்தை மற்றும் அவருடன் 3 பேர் அந்த  வீட்டிற்கு சென்று மாணவியை மீட்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவியை கடத்திய குமாரை கத்தியால் குத்திவிட்டு மனைவியை மீட்டனர். வீடு திரும்பிய மாணவி, என்னை ஆண்டி, சேட்டு, அண்ணாமலை, வேலு, ரவி ஆகிய 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்” என்று கூறியுள்ளார் .இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டத்தையடுத்து மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Categories

Tech |