Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. உயிர் தப்பிய முதியவர்…. ஆய்வு செய்த அதிகாரி….!!

மலைப்பகுதிகளில் கனமழையின் போது ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசெங்குளம் கிராமத்தில் ஒரு ஓட்டு வீட்டில் சொக்கப்பன் என்பவர் வசித்து வருகின்றார். அந்தப் பகுதியில் கனமழை பெய்த போது ஓடுகள் நனைந்து உடைந்து விழ தொடங்கியதால் உடனடியாக அருகில் வசித்து வரும் சொக்கப்பனின் மகன் சிவா ஓடிவந்து தந்தையை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.

இதனையடுத்து அவர் சென்ற சில நிமிடத்தில் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததால் சொக்கப்பன் உயிர் தப்பிவிட்டார். இந்நிலையில் சேதமடைந்த வீட்டை பர்கூர் கிராம நிர்வாக அதிகாரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Categories

Tech |