வேலூரில் பெய்துவரும் கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இவ்வாறு காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், பொன்னை போன்ற பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழை காரணமாக மாங்காய்மண்டி அருகில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்ததால் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
எனவே மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதனால் தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இவ்வாறு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இந்த கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.