சேலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனையடுத்து தம்மம்பட்டி, ஆனை மடுவு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதனால் அந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோன்று அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் பல பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்துள்ளது. இவ்வாறு பெய்து வந்த கனமழையால் குளிர்ந்த காற்று வீசியதுடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.