திண்டுக்கல்லில் 3-வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழையால் வாகனங்கள் மெதுவாக சென்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு திண்டுக்கல்லில் 1 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனையடுத்து மறுநாள் மாலையிலும் மாவட்டம் முழுவதிலும் பரவலான மழையும், சில இடங்களில் சாரலும் பெய்தது. இந்நிலையில் 3-வது நாள் அன்றும் இந்த மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் நாகல்நகர், பேருந்து நிலையம் அருகில் போன்ற முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி காட்சியளித்தது. இந்த மழையால் வாகனங்கள் மெதுவாகவும், பொதுமக்கள் குடை பிடித்தபடி நடந்து சென்றனர்