Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“வெளுத்து வாங்கிய மழை” சிரமப்பட்ட பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ராஜபாளையத்தில் பெய்த மழை காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்ததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. எனவே இந்த சாலைக்கு மாற்றுபாதை இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து பாதாள சாக்கடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உடனடியாக புதிய சாலை போடப்பட்டது. இவ்வாறு போக்குவரத்திற்கு முடக்கம் செய்தபோது பாதாளச் சாக்கடை பணிக்கு சாலையை தோன்றவில்லை. ஆனால் இப்போது பேருந்து போக்குவரத்து தொடங்கியபின் சாலைகள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாலை முதல் ராஜபாளையத்தில் சாரல் மழை பெய்தது. இந்த மழையினால் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை தோண்டப்பட்ட குழியில் வெறும் மண்ணை மட்டும் போட்டு மூடி இருந்ததால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள்மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே மாற்றுப் பாதை இல்லாததால் போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை சீர் செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளனர். ஆகவே பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடித்து தரமான சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |