சுற்றுலாத் தலமாக விளங்கும் ஐரோப்பிய தீவான மால்டாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் நாடே தண்ணீரில் தத்தளிக்கிறது.
சுற்றுலாத் தலத்துக்கு பெயர் போன ஐரோப்பிய தீவானா மால்டாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் நாடே தண்ணீரில் தத்தளிக்கிறது. இந்த மழை ஒரு மாதம் பெய்ய வேண்டிய நிலையில் சில மணி நேரங்களில் கொட்டி தீர்த்ததால் விளை நிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கியது.
இந்நிலையில் வலெட்டா, பர்மார்ரட் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை, சூறாவளி காற்றால் நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெருக்கெடுத்து ஓடிய நீரில் காருடன் சிக்கிக் கொண்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.