Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய 20 பேர்…. போலீஸ் விசாரணை….!!

வேன்-கார் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்ப்பாடியில் இருந்து 16 பேர் கொண்ட திருமண கோஷ்டியினர் வில்லரசம்பட்டிக்கு சென்றுவிட்டு வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பாளையம் பிரிவு அருகில் வந்தபோது வேனும், கேரளாவில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 16 பேர் மற்றும் கார் டிரைவர், கணவன்-மனைவி, குழந்தை என மொத்தம் 20 நபர்கள் லேசான காயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் அனைவரையும் மீட்டு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சையில் இருந்தவர்களைப் பார்த்து உடல் நலம் விசாரித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |