தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் அங்கு நடைபெற்ற சாலை பணியை செய்வதற்காக வேனில் சென்றுள்ளனர் . அப்போது வேன் தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சாலையின் பிரிவில் சென்று கொண்டிருந்தது . திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
அப்போது நிலை தடுமாறிய வேன் சாலையின் வலது பக்கமாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் எடப்பாடியை சேர்ந்த மெய்வேல்(60) மற்றும் மணிகண்டன்(8) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.