ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் 3 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் மற்றும் உறவினர்களுடன் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து துறைமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விஜயகுமார், அவரின் தாய் மற்றும் மனைவி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறையினர் விபத்துக்குள்ளான வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தியு ள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.