மினி லாரி நிலைதடுமாறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணபிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் ஒரு மினி லாரியில் ஹலோ பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு அடேரி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது வாகனத்தின் குறுக்கே மான் ஓடியதால் நிலைதடுமாறிய வேன் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கற்கள் மீது அமர்ந்து பயணம் செய்த கிருஷ்ணபிரசாத் மற்றும் பாலாஜி ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். இதைப் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணபிரசாத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.