நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடியில் சமீபத்தில் 2 பேரை புலி கொன்றுள்ளது. அந்த டி23 என்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி நேற்று 10 வது நாளாக நடந்து வந்த நிலையில் 11 நாளான இன்று தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக சிங்காரா வனப்பகுதியில் டி23 புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
புலிக்கு மயக்கமருந்து கொடுத்து பிடிப்பதாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் புலி பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு வனத்துறையினர் சார்பில் நீலகிரியில் உள்ள டி23 புலியை கொல்லும் திட்டம் ஏதுமில்லை. புலியை உயிருடன் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.