Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசிமிகுந்த வெங்காய சட்னி … இட்லி, தோசைக்கு செம..!!

வெங்காய சட்னி இப்படி செஞ்சா .. குழந்தைகள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க ..

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம்  –  6
நல்லெண்ணெய்  –  3 ஸ்பூன்
கடலைப்பருப்பு  –  1 ஸ்பூன்
வெந்தயம்  –  2 ஸ்பூன்
தனியா  –  1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  –  6
உப்பு  – தேவையான அளவு
பூண்டு  –  6 பள்ளு
புளி கரைசல்  – 2 ஸ்பூன்
கடுகு  – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை  –  தேவையான அளவு

செய்முறை :

ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்  கடலை பருப்பு , வெந்தயம் , தனியா, காய்ந்த மிளகாய் ,பொடிசாக நறுக்கிய வெங்காயம் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பூண்டு ,தேவையான அளவு உப்பு, புளி கரைசல் சேர்த்து நல்ல பிரவுன் நிறமாக மாறும்வரை நன்கு வதக்கவும். பிறகு ஆறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்ததை சேர்க்கவும். ஈஸியான, டேஸ்ட்டான, வெங்காய சட்டினி ரெடி .

Categories

Tech |