வெங்காயம் நாம் எடுத்து கொள்வதால் அவை நம் உடலில் செய்யும் மாயம் பற்றி அறிவோம்.
வெங்காயம் மிகுந்த மருத்துவ குணம் கொண்ட கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பொதுவாக வெங்காயத்தை பச்சையாக மென்று அல்லது சாறாகவோ பயன்படுத்தும்பொழுது பல நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. நாம் உயிர் வாழ கண்டிப்பாக நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இதுதான் நம் உடலின் சுவாசிக்கும் பணியை செய்து வருகிறது. இதனை பாதுகாக்க தவறினால் சுவாசப் பிரச்சினை நிச்சயம். பொதுவாக புகை பிடிப்போருக்கு நுரையீரல் விரைவிலேயே கெட்டு விடும். எனவே புகை பிடிப்போர் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
மூலநோய்:
ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை மூலநோய். இவர்கள் வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து குடித்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.
இளம் வயது வழுக்கை:
மிகப்பெரிய பிரச்சனை இளம் வயதிலேயே தலையில் வழுக்கை ஏற்படுவது. இவர்கள் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் வெங்காயச் சாற்றை தேய்த்து வரும் பொழுது சில வாரங்களில் புதிய முடிகள் முளைக்கத் தோன்றும்.
இரத்த சோகை:
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஐந்து பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வரும் பொழுது ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நீர்க்கடுப்பு:
தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள் 6 பச்சை வெங்காயத்தை மென்று சாப்பிடவேண்டும், சில நிமிடத்திலேயே நீர்க்கடுப்பு எரிச்சல் காணாமல் போய்விடும். சிறுநீரை நன்கு வெளியேற்றும்.
இரத்த அழுத்தம்:
ஒரு 5 வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வாத நோய் வராமல் பாதுகாக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இழந்த சக்தியை மீட்கும் தன்மை கொண்டது.
வலிப்பு நோய்:
காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வந்தால் காலரா தாக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு நோய் குறையும்.
மாரடைப்பு பிரச்சனை:
முக்கியமாக தினமும் மூன்று சின்ன வெங்காயத்தைப் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும். மாரடைப்பு நோயாளிகள் ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும் தன்மை கொண்டது . வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.
இவ்வளவு மகத்துவம் வாய்ந்த வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்து பழக்கப்படுத்துங்கள்.