அமெரிக்காவிலிருந்து மற்றும் எங்கிருந்து வந்தது என்று சரியாக தெரியாத வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கனேடிய வெங்காயம் பாதுகாப்பானது என்று கூறியுள்ள சுகாதாரத் துறை அலுவலர்கள், அமெரிக்காவில் இருந்து வருகின்ற வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்ற வாரம் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட வெங்காயத்தால் சால்மோனெல்லா என்னும் கிருமி பரவியுள்ளது. அந்த வெங்காயத்தை சாப்பிட்டதால் ஆல்பர்ட்டா, மனித்தோபா, ஒன்ராறியோ மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் ஆகிய தீவுகளைச் சேர்ந்த 114 பேர் இந்த கிருமியால் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மக்கள், அந்த பாதிக்கப்பட்ட வெங்காயத்தை சாப்பிட்டதால் சால்மோனெல்லா என்ற தொற்று ஏற்பட்டு 640 பேர் பாதிப்படைந்துள்ளனர். அங்கு இருக்கின்ற 43 மாகாணங்களில் இந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.