வெங்காயம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக கடுமையான ஏற்றம் கண்டன. மொத்த விற்பனை இடத்திலேயே ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில்லறை வணிகர்கள் 2 டன் அளவிற்கும் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள் 20 டன்கள் வரை இருப்பு வைக்கலாம் எனவும் மத்திய நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.