ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மரணத்திற்கு இந்தியா சார்பாக துணை அதிபர் வெங்கையா நாயுடு நேரடியாக சென்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான சேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 13 ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று மாலையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல நாடுகளை சேர்ந்த தலைவர்களும் அதிபரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார்கள்.
அதன்படி இந்திய நாட்டின் சார்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும், பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், கடந்த சனிக்கிழமை அன்று நாடு முழுக்க அரசாங்க துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு, நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று ஆட்சியாளர்களை நேரடியாக சந்தித்து இரங்கல் தெரிவித்தார். மேலும், மத்திய வெளியுறவு மந்திரியான ஜெய்சங்கரும், டெல்லியில் இருக்கும் அமீரகத்தின் தூதரகத்திற்கு நேரடியாக சென்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.