இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் செனகல் நாட்டின் அதிபரை சந்தித்திருக்கிறார்.
செனகல், காபோன் மற்றும் கட்டார் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு செனகல் நாட்டில் இருக்கும் டக்கர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதன்பின்பு நாட்டின் அதிபரான மேக்கி சாலுவை சந்தித்தார்.
இருவரும், சுகாதாரம், ரயில்வே, எரிசக்தி, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் 2 நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை செய்துள்ளனர். மேலும் வெங்கையா நாயுடு வரும் 4-ஆம் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.