‘மாநாடு’ படத்தின் சவுண்ட் ட்ராக்கை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நவம்பர் 25 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சவுண்ட் ட்ராக்கை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Enjoy the complete soundtrack of #maanaadu it’s available in all platforms and here is the YouTube link!! A @thisisysr magic https://t.co/8F21ZBi9ZU
— venkat prabhu (@vp_offl) November 29, 2021