வெந்நீர் குடிப்பவரா நீங்கள், சிறுநீரகத்தையே காலி பண்ணிடுமாம்.
வெந்நீர் பருதுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பது போலவும் சில பக்க விளைவுகளும் வருகிறது சொன்னால் நம்பமுடிகிறதா? மனித உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதனால் உடல் நீர்ச்சத்துடன் இருக்க முடிகிறது.
நாம் சூடான நீரை பருகும் பொழுது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணும்னு நினைச்சு அதிகம் பருகுவது தவறான விஷயம். சூடான நீரை நாம் அதிகம் பருகும் போது நிச்சயமா அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இப்படி சூடான நீரைப் பருகினால் அது உடலின் உள்ளே போய் சிறுநீரகத்தின் சுத்திகரிப்பு வேலையை அதிகப்படுத்தும். இதனால் சிறுநீரகம் நாளடைவில் அதிகம் சேதம் அடைந்து விடும். இரத்தத்தில் இருக்கிற எலக்ட்ரோலைட் வெந்நீர் அதிகம் குடித்தால் நீர்த்துப்போய் செல்களெல்லாம் வீக்கம் ஏற்படும்.
இதனால் தலைவலி மூளை அழுத்தம் ஏற்படும். நம் உடலில் உள் உறுப்புகளில் இருக்கும் வெப்ப நிலையைவிட வெந்நீரில் உள்ள வெப்ப நிலை அதிகம், அதனால் அதை குடிக்கும் போது உணவுக்குழாய் மற்றும் செரிமான பாதையில் ரொம்ப பாதிப்படையும். அதனால் குடிநீர் மற்றும் சூடான பானத்தை அப்படியே குடிக்காமல் ஆறவைத்து குடித்தால் நல்லது.
அதுபோல இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் அதிகமான நீர் அருந்துவதை தவிர்க்கனும் ஏன் என்றால் அது தூக்கத்தின் தன்மையே ரொம்பவே பாதிக்கும். குளிர்ந்த நீரைவிட வெந்நீரில் தான் கிருமி, தொற்றுகள் அதிகமாக அழியும். அதனால் நல்ல காய்ச்சி ஆறவைத்து குடிப்பது மிகவும் நல்லது.