தாய் குளிக்க வைத்திருந்த வெண்ணீரில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலைமேடு எம்.ஜி.ஆர் நகரில் நடராஜ ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், குமரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் துர்கா குளிப்பதற்காக தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி கீழே வைத்திருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராவிதமாக சிறுவன் குமரன் அதன் உள்ளே இறங்கி உள்ளான்.
இந்த விபத்தில் சிறுவன் உடல் முழுவதும் வெந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.