பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியால் வெண்பா கர்ப்பமாகியுள்ளார் என்ற அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இக்கதையில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற விருக்கிறது. இதனை போலவே தெலுங்கில் ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் பல்வேறு ட்விஸ்டுகள் நடைபெற்றுள்ளது.
அதன்படி வெண்பா கதாபாத்திரம் பாரதியின் டிஎன்ஏ சேம்பிளை வைத்து கர்ப்பமாகி விடுகிறார். இதற்கிடையில் பாரதிக்கு தன்னையும் கண்ணம்மாவையும் பிரித்தது வெண்பா தான் என்ற உண்மை தெரியவருகிறது. இதனால் பாரதி வெண்பாவின் சண்டையிட செல்லும்போது அவர் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறுகிறார்.
தெலுங்கில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த கதை களம் கூடிய விரைவில் தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலிலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.