Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன்… நடிகர் சஞ்சீவ்வின் மனைவி வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

நடிகர் சஞ்சீவ்வின் மனைவி ப்ரீத்தி 15 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோவாக நடித்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் சீரியல்களில் மட்டுமல்லாது பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கண்மணி  சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சஞ்சீவ் பிரபல சீரியல் நடிகை பிரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ப்ரீத்தி ஆண்டாள் அழகர் ,பொம்மலாட்டம் ,பந்தம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ப்ரீத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் 15 கிலோ உடல் எடையை குறைத்து தற்போது எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்ததுடன் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |