Categories
கதைகள் பல்சுவை

பல இரவு…. பல நபர்களுடன் உறங்கியுள்ளேன்…. ஆனாலும் “நான் ஒரு வெர்ஜின்”

பல இரவு, பல நபர்களுடன் இருந்தும் இன்னும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறேன் நம்புங்கள் என்று கெஞ்சியது வீட்டிலிருந்த பாய்.

குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் கோடை காலத்தில் ஏற்படும் வெம்மையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இலைதழைகளை பரப்பி படுக்கைகளை செய்தார்களாம். பின்னாளில் அதுவே ஒரு வடிவத்தில் உருவாக்கப்பட்டு அதுவே பாய் ஆனது. ஏன் வெறும் தரையில் படுக்க அந்த பாயை எடுத்து போட்டு படு என்ற வார்த்தையை நம் வாழ்வில் நாம் கேட்டிருப்போம். நம் வாழ்நாளில் இப்போது வந்தது தான் பஞ்சுமெத்தை.

அன்று சிமெண்ட் தரையில் பாய் விரித்து நிம்மதியான தூக்கம் மேற்கொண்டு வந்திருந்தோம். வீட்டில் எப்போதுமே படுக்கை அறையில் ஒரு மூலையில் பாயானது ஒரு ஓரத்தில் சுருண்டு கிடக்கும். சிலருக்கு பாய் விரித்து தரையில் படுத்தால் தான் தூக்கம் வரும். முதுகுவலி குணமாகும் என்பது நம்பிக்கை.

வீட்டில் இருக்கும் பல பேர் பயன்படுத்திய பாயின் நிலையை ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு இந்த பதிவில் கூற நினைக்கின்றோம். அதாவது ஆண்களாகிய பலர் மிகவும் எளிதில் ஒரு பெண்ணை நடத்தை கெட்டவள் என்று பட்டம் தந்து விடுகிறார்கள். அவர்களின் கன்னித் தன்மையின் சந்தேகப்படுகிறார்கள்.

துசரி சீதையின் கன்னித்தன்மை சோதிக்க பட்டதாக தான் இலக்கியங்கள் பேசுகிறது. அன்று முதல் இன்று வரை சில ஆண்களின் ஒரே எண்ணம் பெண் என்பவள் கற்புடன் இருக்க வேண்டும் இருந்தால் மட்டுமே அவள் ஒரு நல்ல பெண். ஒரு ஆணுடன் நெருங்கிப் பழகினால் அந்தப் பெண் அவனிடம் கற்பை இழந்திருப்பார் என்று அர்த்தம் இல்லை.

எப்படி நம்வீட்டு பாயை  வீட்டிற்கு வரும் உறவினர்களோ, நண்பர்களோ உறங்க பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. அதே போல தான் நம்வீட்டு பெண்களும் ஒரு ஆணுடன் நெருங்கிப் பழகுகிறார்கள் என்றால் அந்த ஆண் இவர்களை முழுவதும் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது.

இவர்களும் அவர்களுக்கு சொந்தம் ஆகிவிட முடியாது. பெண்களை சந்திக்கும் ஆண்கள் அவர்களது மனைவி குடும்பத்தினரை தவிர வேறொரு வெளியுலக பெண்ணுடன் முற்றிலும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாமல் காலத்தை கடத்தி விட முடியுமா? என்பதை யோசித்து விட்டு அவர்களுக்கு விதிமுறைகளை வகுத்தால் நன்றாக இருக்கும். இந்த பதிவு ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்களுக்கு சாதகமானது.

Categories

Tech |