Categories
கிரிக்கெட் விளையாட்டு

யுவராஜ் சிங்கின் காதலர் தின பதிவை கலாய்த்த இர்பான் பதான்!

காதலர் தினத்தின்று இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பதிவிற்கு, இர்பான் பதான் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

காதலர்தினம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களது காதலை சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தினர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தனது மனைவிதான் என்றும் தனது காதலி என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பார்த்த சக வீரரான இர்பான் பதான், உங்கள் பதிவில் இருக்கும் உணர்ச்சிகள் உங்களது முகத்தில் இல்லையே என கிண்டலாக இன்ஸ்டாகிராமில் கமெண்ட் பதிவிட்டார். யுவராஜ் சிங்கின் காதலர் தின பதிவை கலாய்த்த இர்பான் பதானின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

38 வயதான யுவராஜ் சிங், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதேபோல, கடந்த மாதம் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இர்பான் பதான் தெரிவித்தார். இந்திய அணி பல போட்டிகளில் வெற்றிபெற இவ்விரு வீரர்களின் பங்களிப்பு அளப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/B8lBH-8DXA2/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |