திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலுக்குச் செல்லும் பாதைகளில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனால் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி இருந்தது. அதன்பின் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினமான நேற்று சுப்பிரமணிய சாமி கோவிலில் புதுமண ஜோடிகள் திருமணம் செய்ய வந்திருந்தனர். ஆனால் அங்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் திருச்செந்தூர் தூண்டிகை விநாயகர் கோவில் முன்பு புதுமண ஜோடிகள் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளனர். இதனைதொடர்ந்து வழக்கு டோல்கேட் அருகில் நின்று புது தம்பதியினர் கோபுர தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.