நடிகை ரகுல் பிரீத் சிங் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று ,என் ஜி கே ,தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்களில் நடித்து வருகிறார் . மேலும் தெலுங்கில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘மே டே’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின் குணம் அடைந்தார் .
இந்நிலையில் நடிகை ரகுல் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை ரகுல் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து படப்பிடிப்புத் தளத்திற்கு 12 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் . தற்போது இவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் செய்யும் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.