சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா மரணம் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்ததும் திமுக தான். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறார்.
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அதைத்தொடர்ந்து சசிகலா சட்டரீதியாக அதிமுகவை மீட்க போராடுகிறார். ஆனால் நான் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றிபெற்று அதிமுகவை மீட்டெடுக்க போராடுகிறேன். எனவே சசிகலாவும் நானும் வெவ்வேறு வழியில் பயணம் செய்தாலும் அதிமுகவை மீட்பதே இருவரின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.