Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

வங்கதேசத்துக்கு 10 ரயில் என்ஜின்…. வாரி வழங்கும் இந்தியா …!!

வங்காளதேசத்திற்கு 10 சிறப்பு ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியுள்ளது.

வங்காளதேசத்திற்கு ரயில் என்ஜின்கள் வழங்குவது பற்றி இந்தியன் ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் ரயில் என்ஜின்களில் 72 விழுக்காடு ஆயுள் காலம் முடிந்த நிலையிலும் இயக்கப்பட்டு வருவதால், சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் என்ஜின் கொள்முதல் செய்வதற்காக வங்கதேசம் இந்தியாவை நாடியது. இதனைத் தொடர்ந்து இந்தியா இன்று காணொலிக் காட்சி மூலமாக 10 டீசல் என்ஜின்களை வங்கதேசத்திற்கு வழங்கக் கூடிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இத்தகைய நிகழ்ச்சியில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரயில்வே அமைச்சர்கள், இரு நாட்டு எல்லையில் இருக்கின்ற ரயில் நிலைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இத்தகைய ரயில் என்ஜின்கள் இந்தியாவின் கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட மேற்கு வங்க மாநில நதியா மாவட்டத்தில் இருக்கின்ற கேதே ரயில் நிலையத்திலிருந்து வங்கதேசத்தின் தர்ஷனா ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |