மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில்கள் மூலமாக தூத்துக்குடி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மானாமதுரை ஆகிய மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் இருந்து சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது . தூத்துக்குடியில் இருந்து ரசாயன உரமும் மற்றும் நிலக்கரி , வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்கள் மற்றும் மானாமதுரையிலிருந்து மரக்கரி ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன. அதனால் சரக்கு போக்குவரத்தில் வருமானம் கடந்த மாதங்களில் ரூ. 3.5 கோடியாக இருந்தது .
அதன் பிறகு கடந்த 5 மாதங்களில் மட்டும் 324 சரக்கு ரயில்கள் மூலம் 9 லட்சம் டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன . இதையடுத்து கடந்த ஆண்டுகளில் நிலக்கரி 37 ரயில் பெட்டி தொடர்கள் மூலம் அனுப்பியதால் 12 கோடி வருமானம் கிடைத்தது . அதனை இந்த ஆண்டு அனுப்பிய நிலக்கரி 73 ரயில்பெட்டி தொடர்கள் மூலம் 24 கோடியை வருமானம் கிடைத்தது. அதனை போலவே டிராக்டர்கள் அனுப்பியதில் சென்ற ஆண்டு கிடைத்த வருமானம் 5.4 கோடியாக இருந்தது. ஆனால் இந்த வருடம் அதன் வருமானம் 6.4 கோடியாக உயர் ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் போக்குவரத்து வருமானத்தை அதிகரிக்க செய்ய மதுரை கோட்ட வர்த்தக வளர்ச்சி குழுவினர்கள் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மதுரை சரக்கு போக்குவரத்தில் முயற்சியின் காரணமாக ஒரு புதிய சரக்கு போக்குவரத்து மதுரை கோடாட்டத்திற்கு கிடைத்துள்ளது. இதையடுத்து புண்ணாக்கு மூட்டைகளை ரயில்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள ராஜ் நந்தகான் என்ற ரயில் நிலையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டது . இதன் தொடர்பாக ரூ. 32.5 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது .