Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அடடே..!! வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதில் இத்தனை ரகசியமா.? ஆமாங்க..தெரிந்து கொள்ளுங்கள்..!!

தண்ணீரின் மகிமை மற்றும் அவற்றின் தேவை அனைவரும் அறிந்திருப்பர்,ஆனால் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன பலன் என்று அறிவீரா..?

தண்ணீர் மிகவும் அவசியமானது என அனைவரும் அறிந்தது. தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு மட்டுமில்லாமல்  நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது. அத்தகைய தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துக் கொள்ளும் பழக்கமானது ஜப்பானியர்களிடம் இருந்து வந்தது. ஜப்பானிய மக்கள் காலையில் எழுந்ததும், பற்களைக் கூட துலக்காமல் 4 டம்ளர் தண்ணீர் குடிப்பார்களாம்..அது மட்டுமில்லாமல் தண்ணீர் குடித்துவிட்டு ஒரு மணி நேரம் எதையும் சாப்பிட மாட்டார். இதன் பெயர்தான் ஜப்பனீஸ் வாட்டர் தெரப்பி.

இதனால்தான் ஜப்பான் மக்கள் எப்பொழுதுமே சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்களாம். இப்படி தினமும் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பொழுது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதும், அப்படி எந்தெந்த நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், என்பதையும் பார்க்கலாம்.

1.  குடல் சுத்தமாகும்:

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்திலேயே மலம் கழிக்க வேண்டும், என்ற எண்ணம் தோன்றி மலம் எளிதில் வெளியேறும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தால் உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் முற்றிலும் வெளியேறி குடல் சுத்தமாகும்.

2. நச்சுக்களை வெளியேற்றிவிடும்:

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மற்றும் மலம் வழியாக வெளியேற்றிவிடும். இப்படி செய்து விட்டு  வருவதனால் உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் நீங்கி உடல் சுத்தமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

3. பசியை தூண்டும்:

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். இதன் விளைவாக நாம் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதோடு மட்டுமில்லாமல், உணவுகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் போய்ச் சேர்வதற்கும் உதவியாக இருக்கும்.

4. தலைவலியை தடுக்கும்:

நிறைய பேருக்கு பார்த்தீர்கள் என்றால் உடலில் உள்ள நீர்சத்து குறைவதால் அதன் பாதிப்பாக தலைவலி ஏற்படும். இப்படி பட்டவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும். அதோடு ஒரு சில மாதங்களில் இந்த தலைவலியும் முற்றிலும் குணமாகும்.

5. அல்சரை தடுக்கும்:

காலையில் சாப்பிடாமல் வேலைக்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம். மெட்டபாலிசம் அதிகரிக்கும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வருவதால் உடலில் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும்.

இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும். உடலுக்கு முழுமையான சத்தும்  சேரும்.

6. ரத்த செல்களின் உற்பத்தி:

தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வர ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இரத்தத்தில் இருக்கக்கூடிய அணுக்களும், ஆக்சிஜன் நிறைந்து காணப்படுவதால் உடலானது எனர்ஜியுடன், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

7. எடையை குறைக்க உதவுகிறது:

உடல்நிலையை குறைக்க நினைப்பவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடும்,  தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும். இப்படி செய்து கொண்டு வருவதால் உடல் எடை குறையும்.

8.பொலிவான சருமம்:

தண்ணீர் குடிப்பதால் பொலிவான சருமத்தை கொடுக்கும். குடல் சுத்தமாக இல்லாவிட்டால் முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துவிடும். அப்படி வரும்பொழுது முக அழகையே கெடுத்துவிடும். அதனால் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று முகம் பொலிவோடு இருக்கலாம்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.  இத்தகைய தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகரிக்கும்.  நோய்கள் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.

Categories

Tech |