Categories
சினிமா தமிழ் சினிமா

“வெறுப்பு எதற்காக”…. இனி அன்பை மட்டுமே நாம் பரப்புவோம்…. இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கம்….!!!!!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்ததில் மருத்துவ விதிகளை மீறவில்லை என தெரியவந்துள்ளது.

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தின் மூலமாக நெருக்கமாகி  ஏழு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். பின்னர் ஜூன் மாதம் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு பிரபலமான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என அனைவரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் மருத்துவ விதிமுறைகளை மீறியதாய் என்பதை ஆய்வு செய்வதற்காக மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு சமீபத்தில் அறிக்கையும் வெளியானது.  இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரத்தில் விதிமுறைகளை மீறவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, “இன்பத்தையும் துன்பத்தையும் எவ்வளவு விரைவாக நாம் பகிர்கிறோமோ அந்த அளவிற்கு அன்பையும் பகிர்ந்தால் நாம் அழகான உலகில் வாழலாம். மேலும் ஆரோக்கியம் என்பது அன்பிலிருந்து வருவதில்லை, அவரவர் சிரிப்பிலிருந்து தான் வருகின்றது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |