தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அருவில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அருவி பகுதியில் பொதுமக்கள் செல்லாமல் தடுப்பதற்காக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 14 ஆம் தேதி முதல் அப்பகுதி மக்களும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.