Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரொம்ப மகிழ்ச்சி…! ”தலையிட முடியாதுனு சொல்லிட்டீங்க” ஹேப்பி ஆன தமிழக அரசு …!!

அரசின் கொள்கை முடிவாக இருக்கும் பூரண மதுவிலக்கில் நீதிமன்றம் தலையிடாது என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த விசாரணையில்அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். அரசின் கொள்கை சார்ந்த முடிவு எடுக்கும் நடவடிக்கையில்  நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தால் அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசுக்கு அதிக நிதி வருவாய் கொடுப்பது மது கடைகள் தான். மதுக்கடைகள் மூலமாக கிடைக்கும் வருவாயை வைத்து தான் தமிழக மாநில அரசு இயங்கி வருகிறது. இந்த நிலையில் நீதிபதி அளித்த இந்த உத்தரவு தமிழக அரசுக்கு ஒரு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே ஊரடங்கால் மதுக்கடை வருவாயை இழந்து தவிக்கும் தமிழக அரசு, அரசின் நிதி தேவைக்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |