வரக்கூடிய 8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சென்னையில் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories